மழையால் ரத்தாகுமா CSK vs RCB போட்டி.., தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
பெங்களூருவில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நெட்டிசன் கூறிய கருத்துக்கு தமிழ்நாடு வெதர்மேன் பதில் அளித்துள்ளார்.
CSK vs RCB
இன்று மாலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வார்கள்.
இதனால், ரசிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழையால் போட்டி ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். அதன்படி, எளிதாக குவாலிபையர் ரவுண்டுக்கு சென்னை அணி தகுதி பெற்று விடும்.
இதுவே பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டும் போதாது. இந்த அணி முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், இரண்டாவது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.
தமிழ்நாடு வெதர்மேன்
இந்நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடகா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கர்நாடகா மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பெங்களூரைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், " பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து வீடு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.
வானம் மிகவும் தெளிவாக இருக்கிறது. மழை வருவதற்கான அறிகுறி இல்லை. ஆரஞ்சு, ஆப்பிள், பைனாபிள் போன்ற எச்சரிக்கைகள் விடப்படுவத்தை அறிய நான் ஆர்வமாக உள்ளேன். நாளை கிரவுண்டில் பார்க்கலாம்" என்று கூறியிருந்தார்.
இவரின் கருத்துக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், "இடியுடன் கூடிய மழை எப்படி நிகழ்கிறது என்பது பற்றி சிலருக்குத் தெரியாது. காலை நேரங்களில் தெளிவான வானம் எப்போதும் மழைக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலையில் அதிக மழை பெய்யாது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |