ரிஷி சுனக் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை சரிசெய்வரா?
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் (Rishi Sunak) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியப் பிரதமராகும் முதலாவது ஆசிய வம்சாவளி பிரித்தானியர் இவராவார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் விலகியதை தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் லிஸ் டிரஸ்.
ஆனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை கையாள முடியவில்லை என்று கூறி பிரதமர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார்.
அதன்பின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்பொது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிஷி சுனக் பிரதமராகியுள்ளார்.
இவர் கூறித்த மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.