ட்ரம்பைக் கொல்ல அமெரிக்க அதிகாரிகளே சதி செய்யலாம்: ஆவிகளுடன் பேசும் நபர் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பைக் கொல்ல சதி நடக்கலாம் என ஆவிகளுடன் பேசும் நபர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளே சதி செய்யலாம்
1963ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியைக் கொன்றதுபோல, ட்ரம்பைக் கொல்ல சதி நடக்கலாம் என்று கூறியுள்ள ஆவிகளுடன் பேசும் மற்றும் மனோவியல் நிபுணரும், இஸ்ரேல் பிரித்தானிய குடிமகனுமான யூரி கெல்லர் (Uri Geller) என்பவர், ட்ரம்புக்கு எதிராக, அமெரிக்க அதிகாரிகளே கூட சதி செய்யலாம் என்று எச்சரித்துள்ளார்.
My dear friends, I'm really concerned about Donald Trump's life... I have a BAD FEELING that something is being planned by the #deepstate! They have the TOOLS, the MOTIVE and the WILLINGNESS. Their only means of comeback is to remove #Trump or they are finished! @realDonaldTrump… pic.twitter.com/73Ia6gHGSO
— Uri Geller (@theurigeller) November 10, 2024
ஆகவே, பெண்டகன் , CIA மற்றும் உளவுத்துறை அதிகாரிகளைக்கூட நம்பவேண்டாம் என்று கூறும் யூரி, அவர்களைத் தேர்வு செய்தது முன்னாள் ஜனாதிபதிகளான ஜோ பைடனும், ஒபாமாவும். ஆகவே, பணம் வாங்கிக்கொண்டு ட்ரம்பை கொலை செய்ய இந்த அதிகாரிகள் முயற்சிக்கக்கூடும் என்கிறார்.
ஆகவே, ட்ரம்ப் தனது பாதுகாப்புக்கு, நம்பிக்கைக்குரியவர்களை மட்டுமே பாதுகாவலர்களாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், உலக கோடீஸ்வரரும், ட்ரம்பின் தீவிர ஆதரவாளருமான எலான் மஸ்கை டாக் செய்துள்ள (tagged) யூரி, ட்ரம்பின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுமாறு எலான் மஸ்க்கைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |