இமான் விவகாரத்தில் பதிலடி கொடுப்பாரா சிவகார்த்திகேயன்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இசையமைப்பாளர் டி. இமான் விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பதிலடி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இமான் விவகாரம்
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் பேட்டி ஒன்றில் இமான் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயன் தங்கள் குடும்பத்தை சேர்த்து வைக்க முயற்சித்ததையே இமான் அவ்வாறு கூறியுள்ளார் எனப் பேட்டிக் கொடுத்தார்.
இந்நிலையில், இமானிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ''சரி, தவறு எது என்பது மனிதர்களைத் தாண்டி இறைவனுக்கு தெரியும். இது எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்'' என்று கூறினார்.
ஆனால், இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை எதுவும் பேசாதது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயனின் அயலான்
இந்நிலையில், இன்று ''அயலான்'' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. படம் அடுத்த வருடம் பொங்கல் விடுமுறை தினத்தை ஒட்டி வெளியாகிறது.
இந்தப் படத்தைத் தயாரித்த கேஜிஆர் நிறுவனம் பணச்சிக்கல் வழக்கில் மாட்டியுள்ளது. ஏற்கெனவே, பலமுறை வெளியீடு தள்ளிப் போன ''அயலான்'' மீண்டும் தள்ளிப் போகுமா என ரசிகர்கள் குழம்பினர்.
ஆனால் படக்குழு, திட்டமிட்டபடி வெளியாகும் என்பதை இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பில், இமான் பிரச்சனையில் இவ்வளவு நாள் எதுவும் பேசாமல் இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் இமானுக்கு பதிலடி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |