அவரைப் போல் எதன் மீதும் ஈர்ப்பில்லாமல் வாழ விரும்புகிறேன்: வில் ஸ்மித்
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தற்போது ஆன்மீக வழியில் பயணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வில் ஸ்மித் ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ரெக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. அதன் பின்னர் இறுக்கமான மனநிலையில் இருந்த வில் ஸ்மித் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
ஆன்மீக வழியில் சிறிது காலம் அவர் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்தியாவில் சத்குருவை சந்தித்த வில் ஸ்மித், அவரது வழியை பின் தொடர்வதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நான் சிறிது காலமாக சத்குருவின் வழியை பின்தொடர்கிறேன். பொருளை மட்டுமே நோக்கி ஓடும் இவ்வுலகில், சத்குரு போல் எதன் மீதும் ஈர்ப்பு இல்லாதவர்களுடன் எனது குடும்பம் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.