ஆஸ்கர் மேடையில் மனைவியை கிண்டலடித்தவரை வில் ஸ்மித் அறைந்தது முன்பே கணிக்கப்பட்டதா? ஆச்சரிய வீடியோ
ஆஸ்கர் விருது மேடையில் வில் ஸ்மித் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்தது முன்னரே கணிக்கப்பட்டதா என கூறும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை, கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார்.
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கேலியாக பேசியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அறைந்ததாக வில் ஸ்மித் தெரிவித்தார். 50 வயதாகும் ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வில் ஸ்மித் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Will Smith pic.twitter.com/CgbQC1zaEl
— Auron (@auronplay) March 28, 2022
இந்த நிலையில் ஆஸ்கர் விருது மேடையில் வில் ஸ்மித் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்தது முன்னரே கணிக்கப்பட்டதா என கூறும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவானது மிகவும் பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி அனிமேஷன் தொடரான Family Guyல் இருந்து எடுக்கப்பட்டதாகும். அதில், Family Guy கதாநாயகன் பீட்டர் கிரிஃபின் மக்கள் கூட்டம் நிரம்பிய ஆடிட்டோரியத்தின் இருக்கை பகுதியில் இருந்து வேகமாக மேடையில் ஏறி தொகுப்பாளரை அறைவார்.
இதே போன்ற சம்பவம் தான் நேற்றைய ஆஸ்கர் மேடையிலும் நடந்தது. இந்த Family Guy வீடியோவை சமூகவலைதளத்தில் பலரும் வெளியிட்டு வில் ஸ்மித் - கிறிஸ் ராக் சம்பவம் போன்றே அப்படியே உள்ளது என தெரிவித்துள்ளனர்.
el pov de Chris Rock pic.twitter.com/diVwxjVTkg
— Yostin Teja (@yostintejaby) March 28, 2022
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        