தொகுப்பாளர் கன்னத்தில் பளார் என அறைந்த வில் ஸ்மித்: ஆஸ்கர் மேடையில் நடந்த பரபரப்பு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நகரில் நடைபெற்ற 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தொகுப்பாளரின் கன்னத்தில் பளார் என அறைந்தது பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.
உலக சினிமாவில் மிக பெரிய கவுரவமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகளின் 94-வது விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
இதில் முதல் முறையாக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருதை வென்று அசத்திய நிலையில், அவர் தொகுப்பாளரின் கன்னத்தில் பளார் என அறைந்த சம்பவம் விழா மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Um. At first I thought this was staged, but Will Smith was seriously pissed off. (Or was this just amazing acting??)
— AC ? (@ACinPhilly) March 28, 2022
What the hell!?#WillSmith #ChrisRock #Oscars #Oscar #Oscars2022 #jadapinkettsmith pic.twitter.com/vhrw4QMnhk
சிறந்த ஆவண படத்திற்கான விருதை வழங்குவது தொடர்பாக நடிகரும், ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கிறிஸ் ராக் பேசிக்கொண்டிருந்த போது, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் தலைமுடி குறித்து நகைச்சுவையாக கிண்டல் செய்தார், அப்போது அதற்கு எரிச்சல் அடைந்த நடிகர் வில் ஸ்மித் விழா மேடையில் நின்று பேசிக்கொண்டு இருந்த கிறிஸ் ராக்கை நோக்கி நடந்து சென்று கன்னத்தில் பளார் அறைந்தார்.
அதன்பின் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்த நடிகர் வில் ஸ்மித் எனது மனைவியின் பெயரை உனது வாயால் உச்சரிக்காதே என எச்சரிக்கையும் விடுத்தார்.
இதனால் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா சிறிது நேரத்திற்கு அமைதியும் பரபரப்பும் அடைந்து காணப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆசை வார்த்தையை நம்பி கோடிகளை இழந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர்!