கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்கு பின் வில் ஸ்மித்தின் இந்திய பயணம்: காரணம் இதுதான்
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் இந்தியாவுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது மனைவியை கேலியாக பேசியதற்காக ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்ததற்காக, நடிகர் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விழா மற்றும் பிற அகாதமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வில் ஸ்மித் மன்னிப்பு கோரினார். இந்த நிலையில் இந்த நிலையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட வில் ஸ்மித், மும்பை நகருக்கு சென்றார்.
விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்களுடன் வில் ஸ்மித் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சுயமாற்றத்திற்கான வழிகளை நாடி ஆன்மீக குருவான யோகி சத்குருவை அவர் சந்திக்க வந்ததாக பின்னர் தெரிய வந்தது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.