பாம்புகள் மனிதர்களை பழி வாங்குமா? நிபுணர்கள் கூறும் கூற்று
பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த, முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட ஒரு உயிரினம்.
சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகள் மனிதர்களுக்கு மரணத்தை உண்டாக்க செய்யும் விஷ உயிரனங்கள் ஆகும்.
பல திரைப்படங்களில் பாம்புகள் பழிவாங்குவது போல் காண்பிக்கப்படுகின்றன.
பாம்புகளுக்கு நிச்சயமாக மூளை இருக்கிறது ஆனால் அதன் பெருமூளையில் அரைக்கோளம் இல்லை என்று அறிவியல் கூறுகிறது.
இதனால் பாம்புகளுக்கு நினைவாற்றல் போன்ற எதுவும் இல்லாததால் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்கிறார் வனவிலங்கு நிபுணர் கூறுகிறார்கள்.
பாம்பின் மூளை மட்டுமே அதற்கு ஏதாவது ஏற்பட்டால், அதை உணர்த்துகிறது, அதனால் தனக்குத்தானே ஆபத்தை உணர முடியும்.
அதாவது, வாசனையின் மூலம் தனக்கு வரும் அச்சுறுத்தல்களை பாம்புகள் அறிந்து கொள்கின்றன.
குறிப்பாக பாம்புகளால் யாரையும் பார்க்க முடியாது என்பதே நிதர்சனம். அதனால், யாருடைய முகத்தையும் பார்க்க முடியாது.
ஒரு பாம்பின் உண்மையான சக்தி அதன் வாசனைத் திறன் ஆகும், அதுவும் நாக்கை நீட்டுவதன் மூலம் தான் வாசனையை அறிந்து கொள்கிறது.
பொதுவாக இந்த திறன் மூலம், எலிகள், பல்லிகள், பூச்சிகள் மற்றும் பிற சாப்பிடும் பொருட்களை நன்றாக வாசனை செய்ய முடியும்.
பாம்பின் மூளை அதன் உடலின் ஒரு சதவீதம் மட்டுமே. அதாவது, ஆறு அடி நீளமுள்ள பாம்பின் மூளை சில கிராம் எடை மட்டுமே இருக்கும்.
திரைப்படங்களில் வருவது போல் ஒருவரைப் பழிவாங்குவதும், அவரைப் பின்தொடர்வதும் பாம்புகளால் சாத்தியமில்லை என்று அறிவியல் உண்மைகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |