தேர்தலில் ஏராளம் இருக்கைகளை இழந்த லேபர் கட்சி: பிரதமர் பதவி விலகுவாரா?
பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் லேபர் கட்சி ஏராளம் இருக்கைகளை இழந்துள்ள நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
ஏராளம் இருக்கைகளை இழந்த லேபர் கட்சி
பிரித்தானியாவில், உள்ளாட்சித் தேர்தல்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் வரை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன.

இங்கிலாந்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், ஆளும் லேபர் கட்சி தனது இருக்கைகளில் பலவற்றை யூகே ரீஃபார்ம் கட்சியிடம் இழந்துள்ளது.
அத்துடன், கன்சர்வேட்டிவ் கட்சியையும் தாண்டி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது லேபர் கட்சி.
இந்நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், லேபர் கட்சியைச் சேர்ந்த Ed Miliband என்னும் நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்டார்மர், பதவி விலகுவதற்கான கால அட்டவணையை வெளியிடவேண்டும் என்று கூறியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், தான் பதவி விலகப்போவதில்லை என்று கூறியுள்ளார் ஸ்டார்மர்.
அடுத்த தேர்தலில் லேபர் கட்சியை தான் தான் வழிநடத்தப்போவதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளதுடன், Ed Miliband தனக்கு ஆதரவளிப்பதில் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் பல சவால்களை எதிர்கொள்வதற்காக என்னை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆகவே, நான் அந்த சவால்களை சந்திக்காமல், நாட்டை குழப்பத்துக்குள் விட்டு விட்டுச் செல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார் ஸ்டார்மர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |