ட்ரம்பின் வரிவிதிப்பு... பிரித்தானியா பதிலடி கொடுக்குமா?
ட்ரம்பின் வரிவிதிப்புகள் உலக நாடுகள் பலவற்றில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
பல நாடுகள் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கத் தயாராகிவருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
பிரித்தானியா பதிலடி கொடுக்குமா?
வரிவிதிப்பு தொடர்பான செய்திகள் வெளியானதும், அமெரிக்காவுக்கே சென்று ட்ரம்பை சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
அமெரிக்கா, பிரித்தானியாவின் நெருங்கிய கூட்டாளர் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார்.
ஆனால், அதற்கெல்லாம் கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
பிரித்தானியா வரிவிதிப்பிலிருந்து தப்பலாம் என்று சொல்லிவிட்டு, பிறகு பிரித்தானியாவையும் தப்பவிடவில்லை ட்ரம்ப்.
பிரித்தானியாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் அனைத்திற்கும் 10 சதவிகித வரிகள் விதிப்பதாக அறிவித்துள்ளார் அவர்.
ஆக, இப்படி சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல், பிரித்தானியா மீது வரி விதித்துள்ள அமெரிக்காவுக்கு பிரித்தானியா பதிலடி கொடுக்குமா?
இல்லை, திரும்பவும் அதே பழைய பாட்டைத்தான் பாடுகிறது பிரித்தானியா. பிரித்தானிய வர்த்தகச் செயலரான ஜோனத்தன் ரெய்னால்ட்ஸ், அமெரிக்கா நமது நெருங்கிய கூட்டாளர். ஆகவே, நாம் அமைதியான அணுகுமுறையைத்தான் மேற்கொள்ள இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
வர்த்தகப்போர் உருவாவதில் யாருக்கும் விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, வரிகளை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், எதிர்க்கட்சியினர் உட்பட சிலர், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று கூறிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |