10 ரன்னுக்கு 4 விக்கெட்! 45 பந்தில் 70 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றிபெற வைத்த கேப்டன்
பிக்பாஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
அதிர்ச்சி கொடுத்த பெஹ்ரென்டோர்ப்
முதலில் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 147 ஓட்டங்கள் எடுத்தது. ஆஷ்டன் ஏகர் 30 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு முதல் ஓவரிலேயே பெஹ்ரென்டோர்ப் அதிர்ச்சி கொடுத்தார்.
அவரது மிரட்டலான பந்துவீச்சில் டிம் செய்பெர்ட், ஜேக் பிரேசர் மெக்கார்க் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
Skipper Sutherland goes large trying to will his side over the line! 💪 #BBL14 pic.twitter.com/AzjR44Kr8T
— KFC Big Bash League (@BBL) January 7, 2025
அடுத்து வந்த பேத்தல் 2 ஓட்டங்களிலும், ஈவன்ஸ் டக்அவுட் ஆகியும் வெளியேறினர். இதனால் மெல்போர்ன் அணி 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது.
வில் சதர்லேண்ட் விஸ்வரூபம்
மார்கஸ் ஹாரிஸ் 21 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் வில் சதர்லேண்ட் (Will Sutherland) களமிறங்கிய விஸ்வரூப ஆட்டம் ஆடினார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த தாமஸ் ஸ்டீவர்ட் ரோஜர்ஸும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
வில் சதர்லேண்ட் 45 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
எனினும் வெற்றிக்காக போராடிய தாமஸ் ஸ்டீவர்ட் ரோஜர்ஸ் (Thomas Stewart Rogers) கடைசி ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.
அவர் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் விளாசினார். ரிச்சர்ட்சன், மோரிஸ், பெஹென்டோர்ப் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
It's coming down to the wire in Perth❗
— KFC Big Bash League (@BBL) January 7, 2025
What a fight back this has been from the @RenegadesBBL after being 5-44! #BBL14 pic.twitter.com/Ro3eXeztZC
WOW 🤯
— KFC Big Bash League (@BBL) January 7, 2025
#BBL14 pic.twitter.com/fSxprz5Xgh
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |