இன்னும் ஒரே நாள்... சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுமா?
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அரசு அறிமுகப்படுத்தும் நிலை ஏற்படுமா இல்லையா என்பதை அறிய இன்னும் ஒரே நாள்தான் உள்ளது!
இன்னும் ஒரே நாள்...
ஆம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது.

வாக்கெடுப்பில், ‘ஆம்’ என அதிக வாக்காளர்கள் வாக்களிப்பார்களானால், அரசு புலம்பெயர்தல் தொடர்பில் கட்டுப்பாடுகள் எடுக்கும் நிலை உருவாகும்.
அதாவது, சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர் அவர்களுடன் இணைந்துகொள்வது, குடியிருப்பு அனுமதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கைகள் தொடர்பில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும்.
அத்துடன், 2050க்குள் சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 10 மில்லியனை எட்டுமானால், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையில்லா போக்குவரத்து ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும், அதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையை சுவிட்சர்லாந்து அணுகுதல் முடிவுக்கு வந்துவிடும்.
விடயம் என்னவென்றால், பல ஐரோப்பிய நாடுகளைப்போலவே, சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்தல் தேவை. ஏனென்றால், நாட்டில் பிறப்பு வீதம் குறைந்துவருகிறது, வயதானோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிக்க, வேலை செய்யும் வயதிலுள்ள மக்கள் தேவை. ஆக நாட்டில் அந்த வயதிலுள்ள மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அந்த எண்ணிக்கையை ஈடு செய்ய புலம்பெயர்ந்தோர் அவசியம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, மக்கள் No to 10 Million Switzerland பிரேரணை தொடர்பில் வாக்களிக்க உள்ளார்கள். மக்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதை அறிய நாடே ஆவலுடன் காத்திருக்கிறது.
வாக்கெடுப்பின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |