பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்க இருக்கும் திட்டம் குறித்து கன்சர்வேட்டிவ் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு அனுமதி
கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு பிரித்தானியாவில் பதவியேற்றதிலிருந்தே, ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாய்ந்துவருகிறது பிரித்தானியா.
பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்ற, அல்லது பிரெக்சிட்டை நிறைவேற்ற பாடுபட்டவர்களை, லேபர் அரசின் நடவடிக்கைகள் கோபம் கொள்ளச் செய்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்க லேபர் அரசு திட்டமிட்டுவருகிறது.
அதாவது, பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டதிலிருந்து, புதிய பிரெக்சிட் விதிகளால், சில பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவரவும், ஏற்றுமதி செய்யவும் பெரும் தாமதம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
துறைமுகங்களில் நாட்கணக்கில் சரக்குகளுடன் லொறிகள் காத்துக் கிடந்ததும் நினைவிருக்கலாம்.
அதை மாற்ற, அதாவது, பிரெக்சிட்டைத் தொடர்ந்து சரக்கு போக்குவரத்துக்கு தடையாக அமைந்த சில விடயங்களை விலக்கிக்கொள்ளுமாறு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோரி வருகிறார்கள்.
பதிலுக்கு, 30 வயதுக்குக் குறைந்த ஐரோப்பிய ஒன்றிய இளைஞர்களை பிரித்தானியாவில் வாழவும் வேலை செய்யவும் பிரித்தானிய அரசு அனுமதிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால், அப்படிச் செய்தால், எப்படி மற்ற புலம்பெயர்ந்தோரால் மருத்துவமனைகள் முதலான சேவைகள் பிரித்தானியர்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டனவோ, அதேதான் மீண்டும் நடக்கும்.
ஆகவே, கன்சர்வேட்டிவ் கட்சியினர், லேபர் அரசு பிரெக்சிட்டுக்கு துரோகம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அதைவிட பெரிய அச்சம் என்னவென்றால், மீண்டும் ஐரோப்பிய நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் பிரித்தானியா வரக்கூடும் என்பதால் கன்சர்வேட்டிவ் கட்சியினர் கோபமடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |