முகத்தில் உள்ள பழுப்பு நிறத் திட்டுக்கள் மறையனுமா? கத்தரிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க
Skin Care
By Balamanuvelan
பொதுவாக நம்மில் பலருக்கு அங்காங்கே முகத்தில் பழுப்பு நிறத்தட்டுக்கள் காணப்படும். இது சருமத்தில் சீரற்ற மெலனின் விநியோகத்தால் பழுப்பு நிறத் திட்டுக்கள் தோன்றுகிறது.
இது பார்ப்பதற்கே அசிங்கமாக காணப்படும். இதனை போக்க செயற்கை பொருட்கள் தான் வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில இயற்கை பொருட்கள் கூட பயன்படுத்தலாம்.
அதில் கத்தரிக்காய் பெரிதும் உதவுகின்றது. இதனை தொடர்ந்து பத்து நாட்கள் இதனைப் பயன்படுத்துவதால் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
- கத்திரிக்காயை எடுத்து வட்ட வடிவத்தில் 1/4 இன்ச் அடர்த்திக்கு நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து திட்டுக்கள் இருக்கும் இடங்களில் சுழல் வடிவத்தில் 3-5 நிமிடங்கள் தடவவும். தாவர ஊட்டச்சத்துகள், வைட்டமின், மினரல் போன்ற சருமத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகள் கத்திரிக்காயில் அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு சிறந்த நன்மையைத் தருகிறது.
- இந்த கத்திரிக்காய் சாறு உங்கள் முகத்தில் தொடர்ந்து 15 நிமிடங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவவும். குறைந்தபட்சம் ஒரு வாரம் தொடர்ந்து இதனைச் செய்து வருவதால் சிறு அளவு மாற்றத்தை உங்களால் நிச்சயம் உணர முடியும். எனவே தொடர்ந்து இதனைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US