நாளை மறுநாள் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்த இடத்தில் நடக்குமா? ரசிகர்களின் கேள்விக்கு கிடைத்த பதில்
ஐபிஎல் போட்டிகளானது மும்பையில் திட்டமிட்டபடி நடைபெறும் என அற்விக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மும்பையில் நடைபெறவுள்ள ஐபிஎல் (2021) போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் ஐபில் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் எனவும், போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தனி அறையில் இருக்க வேண்டுமெனவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை மறுநாள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.