சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படுமா?: சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 28 வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.
இந்நிலையில், பொது முடக்கம் நீட்டிக்கப்பட உள்ளதுடன், மேலும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிப்பட்ட உள்ளன என்று சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Bersetஐ மேற்கோள் காட்டி சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், இன்று பேசிய Alain Berset, சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளையாவது நெகிழ்த்தலாம் என பெடரல் கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுடன் ஆலோசனை செய்த பிறகு, அடுத்த வாரம் இது குறித்த அறிவுப்புகள் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படாது என்று கூறியுள்ள அவர், எந்தெந்த கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ளன என்ற விவரத்தை தற்போது தெரிவிக்கவில்லை.
பெடரல் கவுன்சில் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தவே விரும்புகிறது, அது மக்கள் சலிப்படைந்துள்ளதை புரிந்துகொண்டுள்ளது என்றார் Berset.
அதே நேரத்தில், மொத்தமாக பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமானால், மக்கள் விதிகளை கடைப்பிடிப்பதில் தவறக்கூடாது என்றார் அவர்.
இதற்கிடையில், நகராட்சி, நகரங்கள் அல்லது மாகாணங்கள் அடிப்படையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் திட்டம் ஒன்றும் உள்ளது.
14 நாட்களில் 100,000 பேரில் 10 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படும் இடங்களில் மட்டுமே பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்படும்.
ஆனால், தற்போது, சுவிட்சர்லாந்தின் கொரோனா தொற்று வீதம் 14 நாட்களில், 100,000 பேருக்கு 250 ஆக உள்ளது. ஒரு மாகாணத்தில் கூட அதற்கு குறைவான தொற்று வீதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.