பிரித்தானிய மக்கள் மாமிசம் சாப்பிடுவதை குறைக்க பிரதமர் வலியுறுத்துவாரா?
பல்வேறு நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், மாமிசம் சாப்பிடுவதைக் குறைத்தால் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அதாவது, மாமிச உற்பத்தி, பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்கள் பெருமளவில் உற்பத்தியாக காரணமாக உள்ளது.
ஆகவே, பிரித்தானியர்கள் சாப்பிடும் மாமிசத்தின் அளவைக் குறைக்குமாறு பிரித்தானிய பிரதமர் வலியுறுத்துவாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
மக்கள் மாமிசம் சாப்பிடுவதை குறைக்க பிரதமர் வலியுறுத்துவாரா?
ஆனால், பருவநிலை மாற்றத்தைக் கையாளுதல் என்பதற்கு, மக்கள் தங்கள் சொந்த வாழ்வை எப்படி வாழ்வது என்பதை அவர்களுக்கு சொல்வது என்பது பொருள் அல்ல என பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கும் கடமை என்பது அடுத்த தலைமுறைக்கு அவசியமானதுதான்.
அதற்காக, தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அவர்களுக்கு சொல்வது அதற்கு சரியான வழி இல்லை என்று கூறியுள்ளார் ஸ்டார்மர்.
நாம் தூய்மை ஆற்றலைப் பெற்று, அதன் மூலமாக பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க இருக்கிறோம் என உறுதியாக நம்புகிறேன். அது அடுத்த தலைமுறைக்கு அவசியமானதும் ஆகும்.
ஆக, அவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை வாழவேண்டும் என கூறுவது என் வேலை அல்ல என்று கூறியுள்ளார் ஸ்டார்மர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |