பணியும் பைடன்... இணங்காத ஈரான்! தொடருமா இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம்? தலைவர் கமேனி முக்கிய அறிவிப்பு
2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஏனைய நாடுகளிடமிருந்து ஈரான் நடவடிக்கையையே விரும்புவதாக அந்நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் மீண்டும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணையவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்நது கமேனி இவ்வாறு அறிவித்துள்ளார்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஏனைய நாடுகளிடமிருந்து வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நடைமுறையில் மீறப்பட்ட மற்றும் முரண்பட்டிருக்கிறது.
எனவே, வெறும் வாக்குறுதிகள் உதவாது. இந்த முறை நடவடிக்கை மட்டுமே வேண்டும். ஏனைய நாடுகள் செயல்பட தொடங்கியதை கண்டவுடன், ஈரானும் செயல்படும் என அயத்துல்லா அலி கமேனி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஈரான் முதலில் முழு ஒத்துழைப்புடன் மீண்டும் செயல்பட தொடங்கினால், 2018-ல் தனது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைவிட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மீண்டும் திரும்பும் என்று பைடன் அறிவித்துள்ளார்.
ஆனால், இரு நாடுகளிடையே அவநம்பிக்கை நிலவுவதால், அமெரிக்கா முதலில் செயல்பட வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.