வில்லியம் மன்னராகும்போது ஹரி மேகனின் பட்டங்களை பறிப்பாரா? மக்கள் பதில்
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மன்னராகும்போது ஹரி மேகனின் பட்டங்களை பறிப்பாரா என பிரித்தானிய மக்களிடம் கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.
மக்கள் பதில்
அந்தக் கேள்விக்கு, பிரித்தானிய மக்களில் 9,806 பேர் ஆம் என்று பதிலளித்துள்ளார்கள்.
1,203 பேர், வில்லியம் அப்படி செய்யமாட்டார் என்று பதிலளித்துள்ளார்கள்.
ஆம் என பதிலளித்துள்ளவர்கள், ஹரி ராஜ குடும்ப பொறுப்புகளை உதறித்தள்ளிவிட்டுச் சென்றதும், அதற்குப் பின் அவர் ராஜ குடும்பத்தைக் குறித்து ஊடகங்களிடம் மோசமாக விமர்சித்ததும், ராஜ குடும்ப பட்டங்களை வைத்திருக்க அவர்களை தகுதியற்றவர்களாக ஆக்குவதாக தெரிவித்துள்ளார்கள்.
இன்னும் சிலரோ, ஹரியையும் அவரது குடும்பத்தையும் அரியணையேறும் வரிசையிலிருந்தே நீக்கவேண்டும் என்றே கருத்து தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |