சர்க்கரை நோயாளிகளே! நீங்களும் இந்த தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடனுமா? இதோ சூப்பரான ரெசிபி
வரும் தீபாவளியை முன்னிட்டு அனைவரது வீட்டிலும் இனிப்பு பண்டங்கள் செய்வது வழக்கம்.
இருப்பினும் நமது வீட்டில் சர்க்கரை நேயாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அவர்களுக்கு ஏற்ற வகையில் வீட்டிலே எளிய முறையில் செய்யக்கூடிய சூப்பரான இனிப்பு பண்டம் ஒன்றை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- வறுத்த பாதம் - 1 கப்
- வறுத்த வேர்க்கடலை - 1 கப்
- பிஸ்தா - 1/2 கப்
- வால்நட்ஸ் - 1/2 கப்
- குறைவான கொழுப்புள்ள பால் - 2 கப்
- ஸ்டீவியா சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அனைத்து நட்ஸ் வகைகளையும் லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து குறைவான கொழுப்புள்ள 2 கப் பாலைச் சேர்த்து, கொதிக்கவிடவும். அதன் பின்னர் தீயை மிதமான அளவில் வைத்து அரைத்து வைத்துள்ள நட்ஸ் பவுடரை அதனுடன் சேர்க்கவும்.
இப்போது நன்றாக கிளறிக்கொண்டே இருந்தால் இந்த கலவையானது அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும்போது சர்க்கரை துளசி என அழைக்கப்படும் ரெபாடியானா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்டீவியா சர்க்கரையை 1/2 முதல் 1 டீஸ்பூன் வரை சேர்த்து கலக்கவும்.
இறுதியாக வேண்டுமென்றால் 1 டீஸ்பூன் நெய் இறக்கும் முன்பு சேர்த்துக்கொள்ளலாம். இப்போது மிக்ஸ்டு நட்ஸ் அல்வா தயார். இதனை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.