7 நாட்களில் உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமாக பள்ளங்களை போக்கனுமா? இதோ சூப்பரான டிப்ஸ்!
பொதுவாக பல பெண்களுக்கு முகத்தில் அசிங்கமாக மேடு பள்ளங்கள் இருப்பது சகஜம். இது முகப்பரு கரும்புள்ளிகளாக ஏற்படுகின்றது. இதனால் நிறைய பேர் மேக்கப் மூலம் அந்த அசிங்கமான சருமத்துளைகளை மறைத்து வருகின்றனர்.
எத்தனை நாள் தான் இப்படி மேக்கப் மூலம் முகத்தில் இருக்கும் விரிவடைந்த சருமத் துளைகளை மறைத்துக் கொண்டிருப்பீர்கள்.
இதற்கு என்று ஒரு நிரந்தர தீர்வு இல்லையா என்று பலரும் வருத்தப்படுவதுண்டு. இதனை போக்க எளியமுறையில் சில வழிமுறைகள் உள்ளன. தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
தேவையானவை
- கருப்பு - உளுந்து இரண்டு ஸ்பூன்
- பால் - ஊறவைக்க தேவையான அளவு
செய்முறை
பசும்பால் இல்லாதவர்கள் பாக்கெட் பாலை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
காய்ச்சாத பாலை தான் இதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே 2 ஸ்பூன் கருப்பு உளுந்தில் சிறிதளவு பால் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும்.
மறுநாள் காலை பாலோடு சேர்த்து அந்த கருப்பு உளுந்தையும் மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகம் முழுவதும் கீழிருந்து மேல் பக்கமாக தடவி விட்டு, ஐந்து நிமிடங்கள் வரை உங்களது கை விரல்களால் நன்றாக தேய்த்து முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.
அதன்பின்பு முகத்தில் பூசப்பட்டு இருக்கும் அந்த விழுது நன்றாக காய்ந்து, தோல் இருக்கும் நிலை வர வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம்.
தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். 7 நாட்களில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும். கரும்புள்ளியும், பள்ளங்களும் சிறிதளவு குறைந்த பின்பு, வாரத்திற்கு இரண்டு முறை இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவது நல்லது.
குறிப்பு
- கருப்பு உளுந்து கிடைக்காதவர்கள் வெள்ளை உளுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விழுதை ஒரு நாள் தயார் செய்துவிட்டு, அதை பிரிட்ஜில் சேகரித்தும் வைத்துக்கொள்ளலாம்.
- மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்திருக்கும் விழுதை பயன்படுத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியில் வைத்து அரை மணி நேரம் கழித்து, அதன் குளிர்ந்த தன்மை குறைந்த பின்பு, முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.