ஹீரோ மாதிரி பறந்து வந்த நியூசிலாந்து வீரர் - தென்னாப்பிரிக்க தொடரில் நடந்த வீடியோ காட்சி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் வில் யங் செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இதற்கிடையில் 2வது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 364 ரன்களும், நியூசிலாந்து 293 ரன்களும் எடுத்தது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 354/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 426 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புள்ளது. இதனிடையே இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி பேட் செய்த போது கொலின் டி கிராண்ட்ஹோம் வீசிய பந்தை மார்கோ ஜான்சன் மிட் விக்கெட் திசையில் விளாசினார்.
பந்து சிக்ஸ் போகும் என நினைத்த நிலையில் திடீரென பாய்ந்து வந்த நியூசிலாந்து அணியின் இளம் வீரர் வில் யங் எங்கிருந்தோ வந்து நொடி நேரத்தில் கேட்ச் பிடித்து அசத்தினார். அதன் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Will Young takes one of the greatest catches in the cricket history ?#NZvSA #NZvsSA pic.twitter.com/klszfnjTJQ
— CRICKET VIDEOS ? (@AbdullahNeaz) February 28, 2022