அவுட் இல்லாததற்கு அவசரப்பட்டு வெளியேறிய நியூசிலாந்து வீரர்! அசத்திய அஸ்வின்: வைரலாகும் வீடியோ
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான வில் யங் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆன நிலையில், அது ரீப்ளேயில் அவுட் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஸ்ரேயஸ் அய்யரிடன் அற்புதமான சதத்தால்(105) 345 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி, அக்சர் பட்டேலின் சுழலில் தாக்கு பிடிக்க முடியாமல் 296 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகியது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லதம் 95 ஓட்டங்களும், வில் யங் 89 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 49 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.
Will young is gone he has reviewed but the time's up#INDvsNZTestSeries #INDvsNZ pic.twitter.com/VIiEncGGGf
— WORLD TEST CHAMPIONSHIP NEWS (@RISHItweets123) November 28, 2021
இதன் மூலம் 284 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் இன்னிங்ஸில் 89 ஓட்டங்கள் குவித்த, வில் யங் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்து வீச்சில் எல்.ப்.டபில்யூ ஆகி வெளியேறினார்.
ஆனால், டிவி ரீப்ளேயில் அது அவுட் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஒரு வேளை அவர் ரிவ்யூ கேட்டிருந்தால் அவர் அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம்.
இதனால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம், தற்போது அவர் அவுட் ஆகி வெளியேறியுள்ளதால், இது நியூசிலாந்து அணிக்கு எந்த அளவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நாளை, கடைசி நாள் தெரியவரும்.