சாம்பியன்ஸ் டிராஃபியின் முதல் போட்டியிலேயே சதம்! பாகிஸ்தானை மிரட்டிய வீரர்
கராச்சியில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் வில் யங் சதம் விளாசினார்.
வில் யங்
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராஃபி ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது.
கான்வே, வில்லியம்சன், டேர்ல் மிட்செல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தொடக்க வீரர் வில் யங் (Will Young) பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தார்.
அரைசதம் கடந்த அவர் பவுண்டரிகளை அடுத்தடுத்து விரட்டினார். இதன்மூலம் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.
சதம் விளாசல்
அபாரமாக விளையாடிய வில் யங் சதம் விளாசினார். இது அவரது 4வது ஒருநாள் சதமாகும்.
மேலும் சாம்பியன்ஸ் டிராஃபியில் சதம் விளாசிய நான்காவது நியூசிலாந்து வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.
அவருக்கு முன்பாக கிறிஸ் கெய்ன்ஸ் (102), நாதன் ஆஸ்லே (145), கேன் வில்லியம்சன் (100) ஆகியோர் சதம் விளாசியுள்ளனர். 113 பந்துகளை எதிர்கொண்ட வில் யங், ஒரு சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் எடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |