லண்டனில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்: 25 வயது இளைஞர் மீது கொலை குற்றச்சாட்டு
லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கத்திக்குத்து
லண்டனின் வடமேற்கில் உள்ள பவுண்ட் லேன்(Pound Lane) வில்லெஸ்டன் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த பெண்ணை மீட்டு தீவிர ந சிகிச்சைகளை வழங்கினர், இருப்பினும் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணும், பாதிக்கப்பட்ட நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது.
25 வயதுடைய இளைஞர் குற்றவாளி
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹார்லெஸ்டன் சாலை பகுதியைச் சேர்ந்த நஜீப் ராய்டன் (Najiib Raytaan) கொலை குற்ற விசாரணைக்காக திங்கட்கிழமை வில்லெஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தற்போது விசாரணை காவலில் வைக்கப்பட்ட நஜீப் புதன்கிழமை ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
இந்த சம்பவத்தில் வேறு யாரும் மீதும் சந்தேகம் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |