திருமண வாழ்வின் 10ஆவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் பிரித்தானிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் ... சில அரிய புகைப்படங்கள்
பிரித்தானியா இளவரசர் பிலிப்பை இழந்து தவிக்கும் நிலையில், இளவரசர் வில்லியம் அவர் மனைவி கேட்டின் 10ஆவது ஆண்டு திருமண நாள் விழாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இளவரசர் வில்லியமும் கேட்டும், 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில், பிரபல தொலைக்காட்சியான பிபிசி, வில்லியம் கேட் தம்பதியரின் 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளது.
அடுத்து இளவரசர் வில்லியமும் கேட்டும்தான் ஆட்சி பீடத்தில் அமரவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வில்லியம் கேட் இடம்பெற்றுள்ள பல அரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எப்போதுமே தன் மனைவியை விட்டுக்கொடுக்காதவர் வில்லியம், வில்லியமுடன் என்றாலும் சரி, தனியாக எங்கேனும் சென்றாலும் சரி, கேட் வாயெல்லாம் பல்லாக சிரிக்கும் அந்த சிரிப்பு அவருக்கு கூடுதல் அழகு.
அந்த காட்சிகளையெல்லாம் கண்முன் கொண்டுவரும் வகையில் புகைப்படங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.