மனைவியின் உடல் நலம் குறித்து அறிந்ததால் மோசமான மனநிலைமைக்கு ஆளான வில்லியம்
பிரித்தானிய இளவரசரான வில்லியம், தன் மனைவியான கேட்டுக்கு புற்றுநோய் என தெரியவந்ததும் மிகவும் மோசமாக மனவருத்தம் அடைந்ததாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோசமான மனநிலைமைக்கு ஆளான வில்லியம்
இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என தெரியவந்தபோது இளவரசரின் மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து பேசிய கேட் ராயல் பவுண்டேஷன் என்னும் அமைப்பின் தலைமை நிர்வாக அலுவலராக பணியாற்றியவரான ஜேசன் (Jason Knauf), அதற்கு முன் எப்போதும் இளவரசர் வில்லியமை அவ்வளவு கவலையுடன் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
ஒரு வார இடைவெளியில் தன் மனைவிக்கும் தந்தைக்கும் புற்றுநோய் பாதிப்பு என தெரியவந்தால் வில்லியமுக்கு எப்படி இருந்திருக்கும் என்கிறார் ஜேசன்.
தென்னாப்பிரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த வில்லியமிடம், அவரது மனைவிக்கும் தந்தைக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், அந்த ஆண்டு தன் வாழ்விலேயே கடினமான ஆண்டாக அமைந்தது என்றும், அந்தச் சூழலின் நடுவில் மற்ற வேலைகள் ஒழுங்காக நடப்பதை கவனித்துக்கொள்வது உண்மையாகவே கடினமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |