நான் மரணமடைந்தால் இளவரசி டயானாவைக் குறித்த இரகசியங்கள் வெளிவராமலே போகலாம்: வில்லியம் ஹரியிடம் பேச விரும்பும் பட்லர்
இளவரசி டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே நபர் என அழைக்கப்படும் அவருடைய பட்லர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தான் இளவரசி டயானாவைக் குறித்த சில இரகசியங்களை அவரது மகன்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் அவர்.
டயானாவைக் குறித்த சில இரகசியங்கள்
இளவரசி டயானா தன்னை நம்பி பல விடயங்களைத் தன்னிடம் கூறியதாக தெரிவிக்கும் இளவரசி டயானாவின் பட்லரான பால் பர்ரல் (Paul Burrell), இதுவரை தான் அவற்றைக் குறித்து பேசியதில்லை என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவதுள்ளதைத் தொடர்ந்து தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் பால்.
Credit: Rex
தான் இறந்துவிட்டால் அந்த இரகசியங்கள் டயானாவின் மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்குத் தெரியாமலே போய்விடும் என்று கூறும் பால், அவர்களுக்கு அந்த இரகசியங்கள் தெரிந்தே ஆகவேண்டும் என தான் கருதுவதாகவும், தனக்கு புற்றுநோய் என தெரிந்துவிட்டநிலையில், அவர்களிடம் உண்மையைச் சொல்லாமலே இறந்துவிடுவேனோ என்ற கவலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சரியான நேரம் வந்துவிட்டது
தான் உண்மையைச் சொல்லும் சரியான நேரம் வந்துவிட்டதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ளார் பால்.
அத்துடன், தான் எதையும் எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை என்றும், தான் சொல்லப்போகும் விடயங்கள் ஒருவேளை சகோதரர்களை மீண்டும் இணைக்கலாம் என தான் கருதுவதாகவும், அதற்காகத்தான் தான் டயானாவைக் குறித்த உண்மைகளைக் கூற இருப்பதாகவும் பால் தெரிவித்துள்ளார்.
Credit: Getty
Credit: AP