எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே வில்லியம் மன்னராகலாம்: ராஜ குடும்ப நிபுணர் தகவல்
பிரித்தானியாவின் வருங்கால மன்னர் இளவரசர் வில்லியம்தான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், எதிர்பார்த்ததைவிட அவர் விரைவில் மன்னராகக்கூடும் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீக்கிரமாகவே வில்லியம் மன்னராகலாம்
2023ஆம் ஆண்டு மே மாதம், தனது 73ஆம் வயதில்தான் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றார். ஆனால், அவர் பதவியேற்று ஒரு ஆண்டுக்குள்ளாகவே அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது.
அடுத்த மன்னர் வில்லியம்தான் என்பது உறுதியான விடயம்தான் என்றாலும், எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே வில்லியமும் கேட்டும் மன்னர், ராணியாகக்கூடும் என தற்போது ராஜ குடும்ப நிபுணரான Sally Bedell Smith என்பவர் தெரிவித்துள்ளார்.
புயலுக்கு முன்னே அமைதி என்பது போன்ற ஒரு நிலையில் வில்லியமும் கேட்டும் உள்ளார்கள் என்கிறார் அவர்.
அடுத்து அவர்கள்தான் நாட்டின் மன்னர் ராணியாக பொறுப்பேற்கவேண்டும், அதற்காக அவர்கள் நேரம் எடுத்து தங்களை தயார் செய்துகொள்வது போல உள்ளது என்கிறார் Sally Bedell Smith.
சமீபத்தில் பிரான்சில் நாட்ரிடாம் தேவாலய மறுதிறப்பு விழாவில் மன்னர் பங்கேற்றிருக்கவேண்டும். ஆனால், அவருக்கு பதிலாக இளவரசர் வில்லியம்தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அது, வில்லியம் விரைவில் பெரும் பொறுப்பேற்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |