அமெரிக்காவில் இளவரசி டயானாவை நினைவுபடுத்திய கேட் மிடில்டன்!
அமெரிக்கா சென்றுள்ள இளவரசி கேட் மிடில்டன் தான் அணிந்திருந்த நகை மூலம் இளவரசி டயானாவை நினைவுபடுத்தனார்.
எட்டு ஆண்டுகள் கழித்து, புதன்கிழமை (நவ. 30) கணவர் இளவரசர் வில்லியமுடன் அமெரிக்க பயணத்தைத் தொடங்கிய இளவரசிக்கு கேட் மிடில்டன், மறைந்த தனது மாமியார் இளவரசி டயானாவை நினைவுபடுத்தும் வகையில், டயானாவின் பிரபலமான காதணிகளை அணிந்திருந்தார்.
இளவரசி கேட், பாஸ்டனில் இறங்கி லோகன் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும் அந்த சிறப்பு நகைகளை அணிந்துகொள்ள தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
I-Images/Getty Images
மறைந்த இளவரசி டயானாவுக்குச் சொந்தமான அந்த காதணிகள் கவர்ச்சிகரமான இரட்டை நீலக்கல் மற்றும் வைரங்கள் கொண்டவை.
இளவரசி டயானாவுக்கு மிகவும் விருப்பமான இந்த சிறப்பு காதணிகளை, அவர் 1996 Met Gala உட்பட பல முக்கிய நிகழ்வுகளில் அணிந்துள்ளார்.
PA