பிரபல அமெரிக்க பாடகியின் நிச்சயதார்த்தம்: கவனம் ஈர்த்த இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரின் லைக்
பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், பிரபல விளையாட்டு வீரரான ட்ராவிஸ் கெல்சியுடனான தனது நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிச்சயதார்த்தம் குறித்த டெய்லர் ஸ்விஃப்டின் அறிவிப்பைத் தொடர்ந்து, உலகம் முழுவதுமுள்ள பல்வேறு பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில், அவரது இடுகையை லைக் செய்தவர்களில் ஒரு தம்பதியர் கவனம் ஈர்த்துள்ளார்கள்!
கவனம் ஈர்த்த இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரின் லைக்
Prince William and Kate Middleton, The Prince and Princess of Wales, just liked Taylor Swift and Travis Kelce’s engagement post on Instagram. pic.twitter.com/UUyih4SExP
— Taylor Swift Charts+ (@chartstswift) August 26, 2025
ஆம், டெய்லர் ஸ்விஃப்ட், பிரபல ட்ராவிஸ் கெல்சியின் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் லைக் செய்துள்ள விடயம் கவனம் ஈர்க்க, பிரித்தானிய ராஜகுடும்பத்தினர் அமெரிக்க ராஜகுடும்பத்தினரை வாழ்த்துகிறார்கள் என்னும் ரீதியில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
டெய்லர் ஸ்விஃப்டுக்கு இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் லைக் செய்துள்ள விடயத்துடன், ஏற்கனவே டெய்லர் ஸ்விஃப்ட் இளவரசர் வில்லியமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இடுகை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், அந்த இடுகை குறித்த செய்திகளும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |