இளவரசர் வில்லியம் கேட் தம்பதிக்கு தொல்லை கொடுக்க ஹரி மேகன் போட்ட திட்டம் படுதோல்வி...

Prince Harry Prince William Kate Middleton
By Balamanuvelan Dec 02, 2022 06:30 AM GMT
Report

இளவரசர் வில்லியமும் அவர் மனைவி கேட்டும் அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார்கள்.

சரியான நேரம் பார்த்து சதி செய்த ஹரி மேகன் தம்பதி

பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும், தொண்டு நிறுவனங்களை சந்தித்தல் முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

இந்நிலையில், சரியாக அவர்கள் அமெரிக்கா சென்றுள்ள நேரம் பார்த்து, அவர்களுடைய பணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில், ஹரி மேகன் தம்பதியர் தங்கள் நெட்ஃப்ளிக்ஸ் தொடரின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்கள்.

இளவரசர் வில்லியம் கேட் தம்பதிக்கு தொல்லை கொடுக்க ஹரி மேகன் போட்ட திட்டம் படுதோல்வி... | William Kate Royal Tour

Credit: Getty

வழக்கம்போல மேகன் கண்ணீர் விட, ஹரி விரக்தியுடன் தலையை சாய்த்துக்கொண்டு உட்காரும் காட்சிகளும், பிரைவசி வேண்டும், தங்கள் தனிப்பட்ட வாழ்வு வெளியே தெரியக்கூடாது என்று கூறிக்கொண்டே, கணவனும் மனைவியும் முத்தமிடும் காட்சிகளும் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

தங்கள் பணிகளை பரபரப்பாக துவக்கும் நேரத்தில் இப்படி திடீரென ஹரி ட்ரெய்லரை வெளியிட்டதால் வில்லியம் சற்றே ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இளவரசர் வில்லியம் கேட் தம்பதிக்கு தொல்லை கொடுக்க ஹரி மேகன் போட்ட திட்டம் படுதோல்வி... | William Kate Royal Tour

அமெரிக்க மக்களின் ஆச்சரிய ரெஸ்பான்ஸ்

பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ, பயணத்தின் நோக்கம் நிறைவேறுமா என பல்வேறு கேள்விகள் எழ, அதெல்லாம் ஒரு விடயமே இல்லை என நிரூபித்திருக்கிறார்கள் அமெரிக்கர்கள்!

ஆம், இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரைக் காண மக்கள் எக்கச்சக்கமாக கூடியதில், ஒரு நகரமே ஸ்தம்பித்துப்போனது. பாஸ்டன் நகர மக்கள் ராஜ தம்பதியரை வரவேற்க உற்சாகத்துடன் கூட, இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை எதிர்பாராத தம்பதியர் வந்த வேலையை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, மக்களை சந்திக்க புறப்பட்டார்கள்.

உறையவைக்கும் குளிரில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்க, வில்லியம் கேட் தம்பதியர் அவர்களுடன் அளவளாவச் செல்ல, இது அமெரிக்காவா அல்லது பிரித்தானியாவா என சந்தேகம் ஏற்படும் வகையில் அமெரிக்க மக்கள் திரண்டு ராஜ தம்பதியருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இளவரசர் வில்லியம் கேட் தம்பதிக்கு தொல்லை கொடுக்க ஹரி மேகன் போட்ட திட்டம் படுதோல்வி... | William Kate Royal Tour

Credit: PA

சென்ற இடமெல்லாம், வில்லியம், கேட், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களை நேசிக்கிறோம் என்ற உற்சாகக் குரலுடன், வீட்டில் தயாரித்த வரவேற்பு பதாகைகள், மலர்ச்செண்டுகளுடன் மக்கள் காட்டிய அன்பில் தடுமாறித்தான் போனார்கள் வில்லியம் கேட் தம்பதியர்.

இளவரசி கேட்டுடன் கைகுலுக்கிய ஒரு பெண், ஆனந்தக் கண்ணீர் வடிக்க, மற்றொரு பெண்ணோ, நீங்கள் ஒரு முன்மாதிரியான தாய் என புகழாரம் சூட்ட, எதிர்பார்த்ததற்கு மாறாக தம்பதியரின் பயணம் வெற்றியாகியுள்ளது என்றே கூறலாம்.

இன்னொரு பக்கம், தன் அண்ணன் அமெரிக்கா வரும் நேரம் பார்த்து அவரை அவமதிக்க ஹரி போட்ட திட்டம் பிசுபிசுத்துப்போனது என்றும் கூறலாம்!  

இளவரசர் வில்லியம் கேட் தம்பதிக்கு தொல்லை கொடுக்க ஹரி மேகன் போட்ட திட்டம் படுதோல்வி... | William Kate Royal Tour

Credit: PA


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US