இளவரசர் வில்லியத்தின் ஒரு குழந்தை அரண்மனையில் இருந்து வெளியேறலாம்: அச்சத்தை வெளிப்படுத்திய ஹரி
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் தனக்கு ஏற்பட்ட அதே அனுபவங்கள் இளவரசர் வில்லியத்தின் ஒரு பிள்ளைக்கு நேரலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஹரி.
மனக்கசப்புகள் ஏற்பட்டுவிட்டது
இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள தமது நினைவுக் குறிப்புகள் புத்தகம் Spare விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், தனியார் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்முகத்தில் ஹரி தெரிவிக்கையில்,
@getty
எனக்கும் எனது சகோதரருக்கும் இடையே மனக்கசப்புகள் ஏற்பட்டுவிட்டது, ஆனால் அதை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்றார்.
இருப்பினும், தமது Spare நினைவுக் குறிப்பில் தற்போதைய வேல்ஸ் இளவரசர் வில்லியம் தொடர்பில் தனிப்பட்ட சில தகவல்களையும், வில்லியத்தின் பிள்ளைகளிடம் தமக்கிருக்கும் நெருக்கம் பற்றிய தகவல்களையும் ஹரி வெளியிட்டுள்ளார்.
ஒருகட்டத்தில், வில்லியத்தின் பிள்ளைகளில் ஒருவர் தம்மைப் போல அரண்மனையில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகலாம் எனவும், அப்படியான சூழல் ஏற்பட்டால் அது துயரமான ஒன்று எனவும், அந்த கவலை தமக்கு இருப்பதாகவும் ஹரி தெரிவித்துள்ளார்.
அரண்மனையில் இருந்து வெளியேறலாம்
தமது வெளிப்படையான கருத்துகள் ஒருபோதும் பிரித்தானிய ராஜகுடும்பத்தை சிதைப்பதற்கானதல்ல எனவும், அவர்களை காப்பாற்றும் ஒரு சிறிய முயற்சி மட்டுமே எனவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
@getty
உண்மையை வெளிப்படுத்துவதால் ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவான பலரும் தம்மை சிலுவையில் ஏற்றலாம் எனவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
ஹரியின் நினைவுக்குறிப்புகள் தொடர்பில் கேள்வி கேட்க்கப்பட்ட நிலையில், அதை தவிர்த்து நகர்ந்தவர் வில்லியம்.
மட்டுமின்றி, இதுவும் கடந்து போகும் என பெண் ஒருவரின் பேச்சுக்கு, உண்மை தான் என வில்லியம் பதிலளித்துள்ளதும், ஹரியால் ராஜகுடும்பம் காயம் பட்டுள்ளது என்பதை குறிப்பிடுவதாக உள்ளது என்கிறார்கள்.