அரண்மனையில் நடக்கும் சம்பவங்கள்... மன்னர் சார்லஸ் பதவியைத் துறக்கலாம் என்ற தகவலால் பரபரப்பு
மன்னர் சார்லஸ் விரைவில் தனது பதவியைத் துறக்கலாம் என வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரண்மனையில் நடக்கும் சம்பவங்கள்...
மன்னர் சார்லஸ் விரைவில் தனது பதவியைத் துறக்கலாம் என எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளதற்கு முக்கியக் காரணம், மன்னரும் இளவரசர் வில்லியமும் தொடர்ச்சியாக இணைந்து கூட்டங்களில் பங்கேற்றுவருகிறார்கள்.
அந்த சந்திப்புகளின்போது, மன்னரின் புற்றுநோய்க்கிடையே ஆட்சி நடத்துவது தொடர்பில் இருவரும் விவாதித்துவருவதாக கூறப்படுகிறது.
அதாவது, திடீரென மன்னருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், இளவரசர் வில்லியம் மன்னர் பொறுப்பை ஏற்பதற்கு தயாராகும் வகையில் விவாதங்கள் நடக்கின்றனவாம்.
மன்னர் விரைவில் பதவியைத் துறக்கலாம்
இதற்கிடையில், மன்னர் மற்றும் இளவரசர் வில்லியம் சந்திப்பு குறித்த தகவலை வெளியிட்ட அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், மன்னர் பதவியைத் துறப்பாரானால், அது அவரது சிறந்த முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், மன்னருக்கு புற்றுநோய் பாதித்துள்ளதால், அவருடைய உடல் நிலை எப்போது வேண்டுமானாலும் மோசமாகக்கூடும் என்று கூறியுள்ள அந்த நபர், இப்போது மன்னர் தனது பதவியைத் துறப்பதுதான் மன்னராட்சிக்கு நல்லது என்கிறார்.
மேலும், மன்னர் மரணமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அவரது இறுதிச்சடங்குகளுக்கான திட்டங்களும் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |