இளவரசர் வில்லியம் மன்னராகும்போது ஆட்சி எப்படி இருக்கும்? நிபுணர்கள் கருத்து
ராஜ குடும்ப நிகழ்வுகளை உற்றுக் கவனித்துவரும் நிபுணர்கள், இளவரசர் வில்லியம் மன்னராகும்போது அவரது ஆட்சிமுறை எப்படி இருக்கும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மன்னர் விரைவில் பதவியைத் துறக்கலாம்
மன்னர் சார்லஸ் விரைவில் தனது பதவியைத் துறக்கலாம் என வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதற்கு, முக்கியக் காரணம், மன்னரும் இளவரசர் வில்லியமும் தொடர்ச்சியாக இணைந்து கூட்டங்களில் பங்கேற்றுவருகிறார்கள்.
Image credits: The Royal Family / Instagram
அந்த சந்திப்புகளின்போது, மன்னரின் புற்றுநோய்க்கிடையே ஆட்சி நடத்துவது தொடர்பில் இருவரும் விவாதித்துவருவதாக கூறப்படுகிறது.
அதாவது, திடீரென மன்னருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், இளவரசர் வில்லியம் மன்னர் பொறுப்பை ஏற்பதற்கு தயாராகும் வகையில் விவாதங்கள் நடக்கின்றனவாம்.
Image credits: The Prince and Princess of Wales / Instagram
இளவரசர் வில்லியம் ஆட்சி எப்படி இருக்கும்?
இந்நிலையில், ராஜ குடும்ப நிகழ்வுகளை உற்றுக் கவனித்துவரும் நிபுணர்கள், இளவரசர் வில்லியம் மன்னராகும்போது ஆட்சி வித்தியாசமாக இருக்கக்கூடும் என கணித்துள்ளார்கள்.
மன்னர் சார்லஸ் பாரம்பரியங்களைக் கைப்பற்றுபவர். அவரது மகன் வில்லியமோ, யார் எதைக் கேட்டாலும் அள்ளி வழங்குபவராக இல்லாமல், தேவையற்ற செலவுகள் செய்வதில் நம்பிக்கை இல்லாதவர் என அவர்கள் கருதுகிறார்கள்.
இன்றைய சூழலில், அதாவது, ஏற்கனவே முக்கிய பொறுப்புகளை வகிக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும் நிலையில், ஆட்சியும் பழைய காலம் போல இருக்காது என்கிறார்கள் அவர்கள்.
ஆக, மன்னர் சார்லசைப்போலல்லாமல், இளவரசர் வில்லியம் மன்னராகும்போது, அரண்மனை ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படலாம், தேவையற்றவை என கருதப்படும் செலவுகளை வில்லியம் குறைக்கக்கூடும் என அவர்கள் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |