அமேசான் காடுகளை பாதுகாக்கும் பூர்வக்குடியினருக்கு உதவி: இளவரசர் வில்லியமுடைய திட்டம்
அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருக்கும் பூர்வக்குடியினருக்கு உதவும் நோக்கில் இளவரசர் வில்லியம் நடவடிக்கை ஒன்றை எடுக்க இருக்கிறார்.

அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக...
சுற்றுச்சுழல் தொடர்பிலான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய இளவரசர் வில்லியம் பிரேசில் சென்றுள்ளார்.
நேற்று, அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, வில்லியம், United for Wildlife Summit என்னும் மாநாட்டில் கலந்துகொண்டார்.

அத்துடன், இன்று அவர் 2025ஆம் ஆண்டுக்கான Earthshot Prize என்னும் விருதுகளை வழங்க இருக்கிறார்.
பிரேசில் நாட்டில் மக்களுடன் அளவளாவிய வில்லியம், அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருக்கும் மக்களுக்கு ஆதரவாக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

பருவநிலை நெருக்கடி மற்றும் இயற்கையை பாதுகாப்பது குறித்து நாம் சீரியஸாக அக்கறை கொண்டவர்களாக இருக்கும்பட்சத்தில், சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களுக்கு ஆதரவாக நாம் நின்றேயாக வேண்டும் என்றார் வில்லியம்.

ஆக, பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகளை பாதுக்காப்பதற்காக பிரித்தானிய மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் அந்த திட்டம், பூர்வக்குடியினருக்காக சட்ட உதவி, அவசர உதவி மற்றும் பூர்வக்குடியினரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிதி உதவிகளைச் செய்யும்.
இளவரசர் வில்லியமுடைய இந்த திட்டங்களில், அவருடன், டைட்டானிக் திரைப்பட கதாநாயகனான லியோனார்டோ டிகேப்ரியோவும் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |