டயானாவுக்குதான் ஆதரவு, கமீலாவுக்கு அல்ல: சொல்லாமல் சொல்லிய இளவரசர் வில்லியம்
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் முடிசூட்டுவிழாவின்போது, இப்போதும் தன் ஆதரவு தன் தாய் டயானாவுக்குத்தான், கமீலாவுக்கு அல்ல என்பதை இளவரசர் வில்லியம் சொல்லாமல் சொல்லியதாக தெரிவிக்கிறார், உடல் மொழி நிபுணர் ஒருவர்.
வில்லியம் கமீலாவை அலட்சியப்படுத்திய காட்சி
மன்னராக, ராணியாக முடிசூட்டப்பட்டவர்களை, மற்றவர்கள் தலை குனிந்து வணங்கி மரியாதை செலுத்துவது பிரித்தானிய மரபு.
ஆனால், முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து வெளியேறும்போது, இளவரசர் வில்லியம் முதல் அங்கிருந்த அனைவரும் தலைவணங்கி மன்னருக்கு மரியாதை செலுத்தினர்.
Image: BBC
ஆனால், அவர்களில் பலர் ராணி கமீலாவுக்கு மரியாதை செலுத்தவில்லை. அவர்களில் இளவரசர் வில்லியமும் ஒருவர். இந்த காட்சிகளை வெளியாகியுள்ள வீடியோக்களில் காணலாம்.
டயானாவுக்குதான் ஆதரவு, கமீலாவுக்கு அல்ல என சொல்லாமல் சொல்லிய இளவரசர்
இந்நிலையில், இளவரசர் வில்லியமுடைய இந்த செயல், தன் ஆதரவு இப்போதும் டயானாவுக்குதான், கமீலாவுக்கு அல்ல என சொல்லாமல் சொல்லியதாக தெரிவிக்கிறார் உடல் மொழி நிபுணர் ஒருவர்.
Image: AFP via Getty Images
அதாவது, ராஜ குடும்பத்தினர், தங்களை விட உயர் பதவியிலிருப்பவர்களுக்கு தலைவணங்கி மரியாதை செய்தாகவேண்டும் என்பது மரபு என்று கூறுகிறார் உடல் மொழி நிபுணரான Judi James என்பவர்.
Image: Jonathan Brady/AP/REX/Shutterstock
கமீலா, இப்போது ராணி. அவர் வில்லியமை விட உயர் பதியில் உள்ளார். ஆகவே, வில்லியம் கமீலாவுக்கு மரியாதை செலுத்தியாகவேண்டும்.
ஆனால், மரபை உடைத்து வில்லியம் கமீலாவுக்கு மரியாதை செலுத்தாததுபோல் உள்ளதாக கூறுகிறார் Judi James. ஒருவேளை முன்னரே அவர் கமீலாவுக்கு மரியாதை செலுத்த, அந்த காட்சி கமெராவில் பதிவாகவில்லையா, அல்லது, பிரித்தானியாவின் ராணியாகவேண்டிய தன் தாய் டயானாவின் இடத்தை கமீலா பறித்துக்கொண்டதால் அவருக்கு மரியாதை செலுத்த வில்லியம் தயங்கினாரா என கேள்வி எழுப்புகிறார் Judi James.