அவர் முன்கோபம் கொண்டவர்... இணைந்து பணியாற்றுவது கடினம்: வில்லியம் தொடர்பில் கசிந்த தகவல்
பிரித்தானிய இளவரசர் வில்லியத்துடன் இணைந்து பணியாற்றுவது என்பது கடினமான ஒன்று எனவும் அவர் முன்கோபம் கொண்டவர் எனவும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
சார்லஸ் பொறுமை மிகுந்தவர்
மன்னர் சார்லஸ் பொறுமை மிகுந்தவர் என, இளவரசர் வில்லியமை அரண்மனை ஊழியர்கள் அவருடன் ஒப்பிட்டு பேசியது தற்போது வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியம் உத்வேகம் கொண்ட நபர் என்பதால் அது அவரை பொறுமையிழக்கச் செய்யலாம் எனவும் கூறுகின்றனர்.
@getty
மன்னர் சார்லஸ் கூட சமயங்களில் கோபப்படும் நபர் தான் என்றாலும், ஒரு எல்லையை அவர் வகுத்துக்கொண்டுள்ளார் என அரண்மனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனால், தவறிழைத்தவர்களிடம் அவரால் சகஜமாக பழக முடிகிறது என கூறும் அரணமனை அதிகாரிகள், ஆனால் வில்லியம் அப்படியானவரல்ல எனவும், அவர் எளிதில் மறந்துவிடக் கூடியவரல்ல என்பதால், பழகுவதிலும் சிக்கல் உள்ளது என்கிறார்கள்.
முற்றாக நிராகரித்த வில்லியம்
முடிசூட்டு விழாவிற்கு என தமது சகோதரர் ஹரி லண்டன் திரும்புவதை ஏற்றுக்கொண்டுள்ள இளவரசர் வில்லியம், ஆனால் ஹரி முன் வைத்துள்ள கோரிக்கைகளை முற்றாக நிராகரித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
@getty
ஹரி தமது அனுபவக் குறிப்புகள் நூலில் வில்லியம் தொடர்பில் வெளிவராத பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், முடிசூட்டு விழா ஒருங்கிணைப்பாளர்கள், இரு சகோதரர்களையும் தனித்தனியே உபசரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.