சிறுவயதில் ஹரிக்கு உணவில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது: இளவரசி டயானாவின் நண்பர் தெரிவித்துள்ள அதிர்ச்சி தகவல்
சிறுவயதில் இளவரசர் ஹரிக்கு உணவில் கூட பாரபட்சம் காட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார் தன்னை இளவரசி டயானாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நபர் என்று அழைத்துக்கொள்ளும் நபர்.
வில்லியமுக்கு அதிக உணவு, ஹரிக்கு குறைவான உணவு
இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் சிறுபிள்ளைகளாக இருக்கும்போதே, உணவு விடயத்தில்கூட இருவருக்கும் இடையில் வித்தியாசம் காட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார் இளவரசி டயானாவின் பட்லராக இருந்த Paul Burrell (64).
ஒருநாள், இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் காலை உணவருந்த அமரும்போது, இளவரசர் வில்லியமுடைய தட்டில் மூன்று சாஸேஜ்களும், இளவரசர் ஹரியின் தட்டில் இரண்டு சாஸேஜ்களும் வைக்கப்பட்டனவாம்.
Credit: Getty
அப்போது ஹரி, அது எப்படி அண்ணனுக்கு மட்டும் மூன்று, எனக்கு வெறும் இரண்டு? என கேள்வி எழுப்பினாராம். உடனே, உணவு பரிமாறும் பெண், வில்லியம் உன்னைவிட வயிறு நிறைய சாப்பிடவேண்டும், அவர் ஒருநாள் மன்னராகப் போகிறார் இல்லையா என்றாராம்.
அதைக் கேட்ட ஹரி அமைதியாக தனக்கு வைக்கப்பட்ட உணவை சாப்பிட்டாராம்.
ஹரியின் மனதில் உருவான மனக்கசப்பு
ஆனால், தன் சொந்த வீட்டிலேயே தான் பாரபட்சமாக நடத்தப்பட்டதை எதிர்கொள்ளும் நிலை ஹரிக்கு உருவானது என்கிறார் Paul Burrell.
Credit: ITV
சிறுவயதாக இருக்கும்போது சகோதரர்கள் இருவருக்கும் இடையில் ஆழமான ஒரு பிணைப்பு இருந்ததை தான் கவனித்துள்ளதாகக் கூறும் Paul Burrell, ஆனால், ஹரி தன் மனதில் தன் அண்ணன் மீதும், அவர்க்கு தன்னை விட அதிக முக்கியத்துவம் கொடுத்த ராஜ குடும்பத்தின் மீதும், ஒரு மனக்கசப்பை வளர்த்துவந்துள்ளதை தான் இப்போது பார்ப்பதாகவும் தெரிவிக்கிறார்.
ஆனாலும், இளவரசி டயானா தன் பிள்ளைகளை ஒரேமாதிரிதான் நடத்தியதாக தெரிவிக்கும் Paul Burrell, வில்லியம் படித்த அதே பள்ளிக்கு ஹரியை அனுப்பவேண்டாம் என டயானா கெஞ்சியதாகவும், ஆனால், அவரது கெஞ்சல் யார் காதிலும் விழவில்லை என்றும், வில்லியமுடைய நிழலில் அதே பள்ளியில் படித்த ஹரியை வில்லியமுடன் தொடர்ந்து ஒப்பிட்டுக்கொண்டே இருந்ததால், ஹரி அவமதிப்பை சந்தித்துவந்ததாகவும் தெரிவிக்கிறார்.
Credit: Rex Features
Credit: Rex Features
Credit: AP