அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை சந்திக்கும் இளவரசர் வில்லியம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீவிபத்துக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய இளவரசர் வில்லியமும் பிரான்ஸ் சென்றுள்ளார்.
ட்ரம்பை சந்திக்கும் இளவரசர் வில்லியம்
2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி, பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட அந்த தேவாலயம் தற்போது மீண்டும் திறக்கப்பட உள்ளது.
இன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாட்ரிடாம் தேவாலயத்தைத் திறந்துவைக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் முதலான பல பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்நிலையில், பிரித்தானியா சார்பில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இளவரசர் வில்லியம், அமெரிக்காவின் முதல் பெண்மணியாகிய ஜில் பைடனையும், அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பையும் சந்தித்துப் பேச உள்ளார்.
இதற்கு முன் ட்ரம்ப் 2019ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்தபோது வில்லியம் அவரை சந்தித்தபின், இப்போதுதான் அவர் ட்ரம்பை மறுபடியும் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |