பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜிடம் பெற்றோரான வில்லியம்- கேட் தம்பதி கூறிய ரகசியம்
பிரித்தானிய குட்டி இளவரசரான ஜோர்ஜ் தமது ஏழாவது பிறந்தநாளை கடந்த ஆண்டு கொண்டாடிய நிலையில், அவரது எதிர்காலம் தொடர்பிலான முக்கிய தகவலை பெற்றோரான வில்லியம் மற்றும் கேட் தெரிவித்துள்ளனர்.
குட்டி இளவரசர் ஜோர்ஜ் மற்றும் பெற்றோரான வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதி தொடர்பில் வெளியாகவிருக்கும் புதிய புத்தகத்தில் இது தொடர்பில் விரிவாக அலசப்பட்டுள்ளது.
இளவரசர் ஜோர்ஜின் ஏழாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இடையே, எதிர்காலத்தில் ஒரு நாள் இங்கிலாந்தின் மன்னராக ஜோர்ஜ் முடிசூட இருப்பதை பெற்றோரான வில்லியம் மற்றும் கேட் தெரிவித்துள்ளனர்.
இதனால், தமது பிள்ளைகள் முடிந்த அளவுக்கு மிக சாதாரணமாகவே வாழ்க்கையை முன்னெடுக்க இப்போது கூறப்படும் முக்கிய தகவல்கள் உதவும் என இளவரசர் வில்லியம் நம்புவதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி சிறுவனாக இருந்த காலகட்டத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏதும் தமது பிள்ளைகளுக்கும் ஏற்படாதவாறு இளவரசர் வில்லியம் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வதாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளவரசர் வில்லியம் தமது மகனுடன் எப்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார் என்பதன் உறுதியான நேரம் வெளியாகவில்லை. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம், குட்டி இளவரசர் ஜோர்ஜின் பிறந்தநாளின் போது இளவரசர் வில்லியம் அந்த உண்மையை தெரியப்படுத்தியிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
எதிர்காலத்தில் இங்கிலாந்தின் மன்னராக கூடியவர் அதற்கான நற்குணங்களை இப்போதிருந்தே வளர்த்துக் கொள்ள குட்டி இளவரசருக்கு இது வாய்ப்பாக அமையால்ம் என்கிறார்கள் சில நிபுணர்கள்.
மேலும், 2019ல் அரச குடும்பம் வெளியிடப்பட்ட அதிமுக்கிய கிறிஸ்துமஸ் புகைப்படத்தில் தந்தை வில்லியம், தாத்தா சார்லஸ், பிறகு ராணியார் உடன் தாம் ஏன் பங்குபெற செய்தோம் என்பது குட்டி இளவரசர் ஜோர்ஜுக்கு அப்போது புரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும்,
ஆனால் அந்த புகைப்படத்தின் குறியீடு தொடர்பில் தந்தை வில்லியம் அவருக்கு பின்னர் விளக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.