இளவரசர் வில்லியமை பிரிந்த நேரத்தில் கேட் கூறிய அந்த வார்த்தைகள்: வியப்படைந்த வில்லியமின் தோழி
புனித ஆண்ட்ரூ பல்கலையில் கல்வி பயிலும்போதுதான் இளவரசர் வில்லியமும் கேட்டும் காதலிக்கத் துவங்கினார்கள்.
ஆனால், பட்டம் பெற்ற பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள். அந்த காலகட்டத்தில், வில்லியமுடைய தோழியாகிய ஒரு பெண், கேட்டை சந்தித்துள்ளார்.
அப்போது கேட் கூறிய ஒரு விடயம் தன்னை வியப்பிலாழ்த்தியதாக தெரிவித்துள்ளார் அவர்.
கேட் கூறிய அந்த வார்த்தைகள்
கேட்டை பிரிந்த வில்லியம் ராணுவத்தில் இணைய, கேட்டும் அவரது சகோதரி பிப்பாவும் பார்ட்டிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள்.
அப்படி ஒரு பார்ட்டியில் கேட்டை சந்தித்துள்ளார், வில்லியமின் தோழிகளில் ஒருவரான தாரா (Tara Palmer-Tomkinson).
அப்போது, வில்லியமை பிரிந்த பிறகு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என தாரா கேட்க, நன்றாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கேட்.
ஆனாலும் விடாத தாரா, வில்லியமை பிரிந்தது கஷ்டமாக இருக்கும் இல்லையா என கேட்க, உண்மையாகவே சொல்கிறேன், நன்றாக இருக்கிறேன் என்று கூற வியப்படைந்துள்ளார் தாரா.
வில்லியமைப் பிரிந்திருந்த நேரத்தில், அவர் என்னை பிரிந்துவிட்டார், அவர் அப்படி, இப்படி, என எதையாவது சொல்லியிருக்கலாம் கேட். ஆனால், அவர் அப்படி எதுவும் சொல்லாததே தாராவின் வியப்புக்குக் காரணம்.
அந்த சம்பவம் குறித்து தற்போது பேசியுள்ள ரிச்சர்ட் ஈடன் என்னும் ராஜ குடும்ப நிபுணர், தான் அந்த விடயம் குறித்து விவாதிக்க விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார் கேட் என்கிறார்.
அந்த காலகட்டத்தில், கேட்டை பார்ட்டிகளை விரும்பும் ஒரு இளம்பெண்ணாக மக்கள் பார்த்தார்கள். ஆனால், தான் சொல்ல விரும்பவில்லை என முடிவு செய்த ஒருவிடயத்தை, தான் சொல்லமாட்டேன் என்னும் உறுதி கொண்ட ஒரு பெண்ணாக கேட்டை நான் பார்த்தேன் என்கிறார் ஈடன்.
அது ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கே உரிய ஒரு குணம் என்று கூறும் ஈடன், அப்போது ராஜ குடும்பத்தில் இணையாத நிலையிலும், மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போல நடந்துகொண்டுள்ளார் கேட் என்கிறார் ஈடன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |