டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவதற்கு இது தான்! ரகசியத்தை கூறிய கேன் வில்லியம்சன்
டி20 உலகக் கோப்பையில் தான் சிறப்பாக செயல்படுவதற்கு பின்னணியில் இருக்கும் காரணத்தை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றதில் மூலம் நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தகுதிப்பெற்றது.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் டி20 உலகக் கோப்பை கனவை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தான் சிறப்பாக செயல்படுவதற்கு ஐபிஎல் தொடர் தான் காரணம் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடியது அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற உதவியது.
அதுமட்டுமின்றி, நிலைமைகள் பற்றிய கூடுதல் அறிவைப் பெறவும் உதவியது.
இவை அனைத்தும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட உதவியதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.