ஃபுல்டாஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆன கேன் வில்லியம்சன்! மோசமான விக்கெட்டின் வீடியோ
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மோசமாக ஆட்டமிழந்தார்
வில்லியம்சன் 58 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 17 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் மோசமாக ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கசலி'ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி களமிறங்கியது.
கேப்டன் கேன் வில்லியம்சன் மிகவும் பொறுமையாக ஆடினார். 58 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்த அவர் 17 ஓட்டங்கள் எடுத்தார்.
அப்போது அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் சம்பா வீசிய ஃபுல்டாஸ் பந்தை பேட்டில் எதிர்கொள்ள அவர் தவறவிட்டதால் காலில் பட்டது. உடனே சம்பா எல்.பி.டபிள்யூ அவுட்டுக்கு முறையிட்டார். களநடுவரும் அவுட் கொடுத்ததால் விரக்தியுடன் வில்லியம்சன் வெளியேறினார்.
Maybe the strangest way you'll ever see one of the world's best dismissed ? #AUSvNZ pic.twitter.com/8Aww5q8xC4
— cricket.com.au (@cricketcomau) September 8, 2022