இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்! என்ன ஆனது?
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியலிருந்து கேன் வில்லியம்சன் விலகியதை நியூசிலாந்து கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் ஜூன் 10ம் திகதி Edgbaston மைதானத்தில் தொடங்கவுள்ளது.
2வது டெஸ்டில் வெற்றிப்பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இடது முழங்கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைய சிறிது ஓய்வு பெறுவதற்காக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து கேன் வில்லயம்சன் விலகினார் என நியூசிலாந்து கிரிக்கெட் உறுதிப்படுத்தியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவராக TOM LATHAM நியமிக்கப்பட்டுள்ளார்.
வில்லயம்சனுக்கு பதிலாக Young will நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் இந்தியாவுக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை கருத்தில் கொண்டு வில்லயம்சனுக்கு ஓய்வு அளிக்க முடிவெடுக்கப்பட்டதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் GARY STEAD தெரிவித்துள்ளார்.