ஆஸ்கர் விழாவில் பரபரப்பு! அலோபீஷியா நோய் என்பது என்ன?
பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்க்கெட் ஸ்மித்தை உருவ கேலி செய்த தொகுப்பாளரை மேடையிலேயே வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியிருந்தது.
இதனை தொடர்ந்து மிகவும் உருக்கமாக பேசிய வில் ஸ்மித், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
உருவ கேலி செய்தது ஏன்?
வில் ஸ்மித்தின் ஜடா பிங்க்கெட்டின் தலையில் முடி இல்லாதது பற்றியதாகவே அந்த உருவ கேலி இருந்தது.
ஆலோபீசியா (alopecia) என்னும் நோயினால் அவதிப்பட்டுவரும் ஜடா பிங்க்கெட்டின் தலையில் முடி கொட்டத் தொடங்கியது.
இதனை அவரே கடந்த 2018ம் ஆண்டு அறிவித்ததுடன் மொட்டை அடித்துக் கொண்டார்.
ஆலோபீசியா என்பது என்ன?
நோய் எதிர்ப்பு மண்டலம், மனிதர்களின் மயிர்க் கால்களைத் தவறாகத் தாக்குவதால் ஆலோபீசியா ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது திட்டு திட்டாக முடி விழுவது, இது உச்சந்தலையில், புருவங்களில், கண் இமைகளில் என எங்கு வேண்டுமானாலும் அல்லது உடலின் பிற பாகங்களிலும் முடி கொட்டி வழுக்கையாகிவிடும்.
முடி வளர்வதை தடுக்கும் அல்லது மொத்தமாக முடி கொட்டி விடும், இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடக்கூடும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர். முடி இழப்பைத் தவிர வேறு அறிகுறிகள் எதுவும் அவர்களுக்கு இருப்பதில்லை.
Patchy - ஒன்று அல்லது பல நாணய வடிவிலான திட்டுக்கள் தலையில் அல்லது உடலின் பிற பாகங்களில் ஏற்படக்கூடும்.
Totalis - தலையின் ஒட்டுமொத்த முடியை இழக்க நேரிடும்.
Universalis - தலை, முகம், உடல் என மொத்தமாக முடி கொட்டும்.