விம்பிள்டன் பள்ளி கார் விபத்து: ஓட்டுநர் மீது அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் பதிவு
விம்பிள்டன் பள்ளி கார் விபத்தில் கார் ஓட்டுநர் மீது அதிகாரப்பூர்வமாக குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விம்பிள்டன் கார் விபத்து
கடந்த 2023ம் ஆண்டு விம்பிள்டன் தொடக்கப்பள்ளியில் நடந்த மோசமான கார் விபத்தில் நாரியா சஜ்ஜத் மற்றும் செலினா லாவ் ஆகிய இரண்டு 8 வயது சிறுமிகள் உயிரிழந்தனர்.
இந்த கார் விபத்தில் தென்மேற்கு லண்டனை சேர்ந்த 49 வயது கிளேர் ப்ரீமேண்டில்(Claire Freemantle) என்ற நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் விசாரணையில் கிளேர் ப்ரீமேண்டில் மீது அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள்
வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கிளேர் ப்ரீமேண்டில் மீது கிட்டத்தட்ட 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 வழக்குகள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தல், 7 வழக்குகள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி காயத்தை ஏற்படுத்தல் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜூன் 16ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ப்ரீமேண்டில் ஆஜராக உள்ள நிலையில், தான் குற்றமற்றவர் என வாதிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |