லண்டனில் பள்ளி மீது கார் மோதி கொல்லப்பட்ட குழந்தை: பெண் கைது
லண்டனில் பள்ளி மீது கார் மோதி கொல்லப்பட்ட குழந்தை குறித்த விவரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
வியாழக்கிழமையன்று லண்டனிலுள்ள விம்பிள்டன் என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின்மீது கார் ஒன்று வேகமாக மோதியது.
பலியான குழந்தை
அந்த கோர விபத்தில் பலியான எட்டு வயது சிறுமி குறித்த சில விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்தச் சிறுமியின் பெயர் Selena Lau. அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது.
அதே விபத்தில், மற்றொரு எட்டு வயது சிறுமியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 40 வயது பெண் ஒருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Photograph: Met Police
ஒரு ஏழு மாதக் குழந்தை உட்பட 16 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில், அவர்களில் 10 பேர் மருத்துவமனைகலில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.
இந்த கோர விபத்தை ஏற்படுத்திய லாண்ட் ரோவர் காரின் சாரதியாகிய 46 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |