போட்டியின் நடுவே சுருண்டு விழுந்த விம்பிள்டன் டென்னிஸ் நட்சத்திரம்: எகிறிய இதயத் துடிப்பு
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் களமிறங்கிய சீனாவின் Yibing Wu போட்டியின் நடுவே திடீரென்று சுருண்டு விழுந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.
திடீரென்று சுருண்டு விழுந்துள்ளார்
சீனத்து டென்னிஸ் நட்சத்திரம் Yibing Wu போட்டியின் போது மூச்சுத்திணறலுடன் திடீரென்று சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் அவரை சோதித்ததில், அவரது இதயத் துடிப்பு அதிகரித்திருந்ததை கண்டறிந்தனர்.
@bbc
இதனையடுத்து அவர் மருத்துவர்களுடன் களத்தில் இருந்து வெளியேறினார். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், Yibing Wu-ன் இதயத் துடிப்பு அப்போது 187 என ஆபத்தான கட்டத்தில் இருந்துள்ளது.
மேலும், தமக்கிருக்கும் இந்த சிக்கல் தொடர்பில் Yibing Wu ஏற்கனவே தெரிந்து வைத்திருந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. ஆட்டத்தின் இரண்டாவது செட் நடந்துகொண்டிருக்கும் போதே, Yibing Wu சுருண்டு விழுந்துள்ளார்.
@bbc
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம்
இதனையடுத்து, 3 நிமிடங்கள் ஓய்வு அறிவிக்கப்பட, 15 நிமிடங்கள் கடந்தும் Yibing Wu களத்திற்கு வரவில்லை. அவருக்கு எதிராக விளையாடி வந்த அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் Frances Tiafoe காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
@ap
இந்த நிலையில், Yibing Wu மீண்டும் களத்திற்கு வந்தார். தொடர்ந்து விளையாடவும் செய்தார். ஆனால் 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |